இறுதி நேரத்தில் தோனி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி ; சென்னை அணிக்கு தோல்வி தான ? முழு விவரம் இதோ ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்து ஐபிஎல் 2024 போட்டிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. அதில் இருந்து ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் லீக் பொடிககிளில் மிகவும் புகழ் பெற்ற அணியாக தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது.ஆமாம், இதுவரை நடைபெற்று முடிந்த சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை கோப்பையைம் வென்றுள்ளனர். அதிலும் ஐபிஎல் அறிமுகம் ஆனதில் இருந்தே சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி.

கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அதுவும் கேப்டனாக விளையாடி வந்துள்ளார். இருப்பினும் 42 வயதான மகேந்திர சிங் தோனி எப்பொழுது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

இருப்பினும் கடந்த ஆண்டு கோப்பையை வென்ற பிறகு பேசிய தோனி தான் இன்னும் பிட் ஆக தான் இருக்கிறேன். அதனால் நான் அடுத்த (2024) ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். அதேபோல இந்த ஆண்டும் விளையாட போகிறார் தோனி. இருப்பினும், அடுத்த ஆண்டு ஓய்வை அறிக்கை போவதால் கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்து ஒரு ப்ளேயர் ஆக விளையாட உள்ளார்.

ஒரு அனுபவம் வாய்ந்த கேப்டன் இல்லையனென்றால் எப்படிபட்ட அணியாக இருந்தாலும் நிச்சியமாக ஆபத்து தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இளம் வீரரான ரூட்டுராஜ் கெய்க்வாட் தான் இனிவரும் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக வழிநடத்த போகிறார். அதனால் சென்னை ரசிகர்கள் இடையே ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோனிக்கு பிறகு கெய்க்வாட் கேப்டனாக விளையாடுவது சென்னை அணியின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையுமா ? இல்லையா ? இளம் வீரரான கெய்க்வாட் அணியை எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் அணியை சிறப்பாக வழிநடத்துவாரா ? உங்களது கருத்தை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!