சுயநலம் இல்லாத மனிதர்..! போட்டியின் போது தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பர் – நன்றி தெரிவித்த கோலி .. யார் அவர் ?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுள்ளது இந்தியா. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர்.

முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 317 ரன்களை எடுத்தனர். அதில் கே.எல்.ராகுல் 62, தவான் 98 ரன்கள், குர்னல் பாண்டிய 58 ரன்கள் எடுத்துள்ளனர். கே.எல்.ராகுல் மற்றும் குர்னல் பாண்டிய ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை விளையாடி அசத்தியுள்ளார். அதன்பின்னர் 318 எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேனான ஜேசன் ராய் 46 ரன்கள் மற்றும் பரிஸ்டோவ் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

Read More: அவரது திறமையால் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ளார்… நான் அதற்கு காரணம் இல்லை..தோனியின் அதிரடி கருது..!!

முதல் இரண்டு விக்கெட்களுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் 42.1 ஓவரில் 10 விக்கெட் இழந்த இங்கிலாந்து அணி வீரர்கள் 251 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் இந்தியா கிரிக்கெட் அணி 66 ரன்கள் விதியசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் இப்பொழுது முன்னிலையில் இருக்கிறது இந்தியா.

போட்டி முடிந்த பிறகு கோலி அளித்த பேட்டியில் ; குர்னல் பாண்டிய மற்றும் கே.எல்.ராகுல், மற்றும் தவான் ஆகிய மூவருக்கும் நன்றி கூறியுள்ளார். குர்னல் மற்றும் பிரஷித் கிருஷ்ணா அவர்களின் முதல் சர்வதேச போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

அதன்பிறகு பேட்டியளித்த விராட் கோலி , தவானுக்கு தனியாக ஸ்பெஷல் நன்றியையும் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்து டி-20 போட்டிகளில் முதல் போட்டியில் மட்டுமே விளையாடிய தவானுக்கு அதன்பிறகு அவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர் எதையும் பார்க்காமல் அனைத்து வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை கொண்டு வந்து கொடுப்பர்.

அவர் எதையும் எதிர்பார்க்காமல், சுயநலம் இல்லாமல் இதனை செய்துள்ளார். எங்களுக்கு தெரியும் அவர் நிச்சியமாக ஒருநாள் போட்டியில் நல்ல ரன்களை எடுப்பர் என்று ; இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.