ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை மொத்தம் 32 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதம் மீதமுள்ள நிலையில் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது. ஏனென்றால் இந்த முறை மொத்தம் 10 அணிகள் என்பதால் இந்த முறை மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாடி வருகிறது ஐபிஎல் டி-20.
இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் – ரவுண்டரான பொல்லார்ட் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிவிட்டார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இன்னும் சில ஆண்டுகள் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை பற்றி பேசிய பொல்லார்ட் ; ” பல யோசனைகளுக்கு பின்பு தான் நான் இந்த முடிவை கையில் எடுத்துள்ளேன். ஏனென்றால் சர்வதேச போட்டியில் இருந்து இருந்து விலகுவது யாருக்கு விருப்பம் இல்லாத ஒன்று தான், ஆனால் வேறு வழியில்லை, அதனை செய்துதான் ஆக வேண்டும்.”
“என்னுடைய இடத்திற்கு பல இளம் வீரர்கள் அவர்களும் இருக்க வேண்டும் என்று கனவு காண்பது உண்மை தான். நான் இதுவரை மொத்தம் 15 ஆண்டுகளாக சர்வதேயா போட்டிகளில் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறேன். அதிலும் 10 வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்துள்ளேன்.”
“என்னுடைய ஹீரோ பிரைன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியின் நான் 2007ஆம் ஆண்டு முதல் முதலில் அணியில் விளையாட தொடங்கியது எனக்கு இன்னும் நியாபகத்திற்கு வருகிறது. அந்த மெரூன் நிறங்களை உடைய அணிந்துகொண்டு, மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடியது ஒரு பாக்கியம்.” என்று கூறியுள்ளார் பொல்லார்ட்.
பொல்லார்ட் இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டியின் ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த முறை அவரது அதிரடியான ஆட்டம் இல்லை என்பது தான் உண்மை.
ஏனென்றால் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 82 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் பொல்லார்ட். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக பொல்லார்ட் இருந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய பொல்லார்ட் -க்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!