England vs India 2021: உலக டெஸ்ட் இறுதி போட்டிக்கு பின்பு இங்கிலாந்து அணியை எதிர்த்து ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இப்பொழுது 4வது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது.
அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இந்தியா அணி 61.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 191 ரன்களை மட்டுமே அடித்தது. பின்பு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் போட்டியில் 84 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 290 ரன்களை அடித்தனர்.
பின்னர் இப்பொழுது இந்திய அணி 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. அதில் இந்திய அணி 92 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 270 ரன்களை விளாசியுள்ளனர். அதில் ரோஹித் சர்மா 127 ரன்கள், கே.எல்.ராகுல் 46 ரன்கள், புஜாரா 61 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது விராட்கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்து வருகின்றனர்.
போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியுடன் ஒரு பேட்டி ஒன்று நடைபெற்றது. அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷமி ;
தோனி நீங்கள் நினைக்கும் மாதிரி அவர் கிடையாது. அவரை பார்க்கும்போது அவர் யாரிடமும் பேசாத ஒருவர் போலத்தான் தெரியும். ஆனால் அவர் அதற்கு எதிர்மாதிரி தான் தோனி. அவர் கூட எப்பையுமே 2 அல்லது 3 பேர் கூடவே இருப்பார்கள்.
ஏனென்றால் அவர் எப்பொழுதும் எல்லாரிடமும் சந்தோசமாக பேசுவது வழக்கம். இரவில் கூட நீண்ட நேரம் பேசுவார், அதனை இப்பொழுது நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று கூறியுள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமின்றி, தோனி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.