சென்னைக்கு டாட்டா காட்டிய சிஎஸ்கே வீரர்கள்….! சோகத்தில் சென்னை ரசிகர்கள் … ஏன் தெரியுமா?

0

ஐபிஎல் 2021: வருகின்ற ஐபிஎல் 2021 போட்டி ஏப்ரல் மாதத்தில் 9 ஆம் தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கின்றன. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதனால் இந்த ஆண்டு இந்தியாவில் தான் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகமாக உள்ளதால், ஐபிஎல் போட்டியில் சில மைதானத்தில் தான் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அதிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி , கிருஷ்ணப்ப கவுதம், ஹரி ஷங்கர் ரெட்டி மற்றும் சில சென்னை வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்க: நான் இதற்கு தான் அழுதேன் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் குர்னல் பாண்டியவின் ..! நெகிழ்ச்சியான பதிவு…

சென்னைக்கு டாட்டா காட்டிய சிஎஸ்கே வீரர்கள்….! சோகத்தில் சென்னை ரசிகர்கள் … ஏன் தெரியுமா?

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் மிகவும் சொதப்பல் ஆட்டத்தை விளையாடியுள்ளனர். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணிக்கு சரியான அணி அமையவில்லை என்று கூட சொல்லலாம். ஏனென்றால் ஐபிஎல் 2020 சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா சில காரணங்களுக்கு அவர் ஐபிஎல் 2020 போட்டியில் கலந்து கொள்ள முடியமால் போய்விட்டது.

இதுவரை நடந்த 12 ஐபிஎல் சீசன் போட்டிகளில் 2020ஆம் ஆண்டு தான் முதல் முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் போகாமல் வெளியேறியது. அதனால் சென்னை வீரர்கள் மட்டுமின்றி சென்னை அணியின் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். ஏனென்றல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் கடினமான அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிக்கு சில மைதானங்கள் மட்டுமே பயன்படுத்த படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் எந்த அணிக்கும் அவரவர் ஹாம் மைதானம் கிடையாது என்று கூறியுள்ளனர். அதனால் சென்னையில் பயிற்சியை மேற்கொண்ட சென்னை அணியின் வீரர்கள் இன்று சென்னையில் இருந்து கிளம்பி மும்பையில் உள்ள மைதானத்திற்கு சென்றுள்ளனர்.

ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள மைதானத்தில் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வாறு டெல்லி அணியை எதிர்கொள்ள போகிறது என்று பொறுத்துதான் பார்க்க வேண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் போட்டியில் யார் போட்டியை வெல்வார்கள்?? உங்கள் கருது ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here