ஐபிஎல் 2021; வருகின்ற ஐபிஎல் 2021 போட்டி சென்னை உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி மும்பை இண்டிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஏப்ரல் 9ஆம் தேதி மோத உள்ளன. கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என்றும் முதலில் நடக்கும் சில போட்டிகளில் ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்று கூறியுள்ளது பிசிசிஐ. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தான் சிரிஸ்க்ட் ரசிகர்கள் மைதானத்துக்கு சென்று சந்தோசமாக போட்டிகளை பார்த்து வந்தனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மோசமான ஆட்டத்தை விளையாடினார். கடந்த ஆண்டு போட்டிகளில் வெற்றியைவிட தோல்விகள் தான் அதிகம் சந்தித்தது சிஎஸ்கே அணி. அதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். கடந்த ஆண்டு போட்டியில் சென்னை அணியில் வீரர்கள் யாரும் சரியாக அமையவில்லை. ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இரு வீரர்களும் அணியில் இல்லாததால் சரியான அணியாக சென்னை அணி உருவெடுக்க முடியாமல் போய்விட்டது.
இதையும் படியுங்க: சென்னைக்கு டாட்டா காட்டிய சிஎஸ்கே வீரர்கள்….! சோகத்தில் சென்னை ரசிகர்கள் … ஏன் தெரியுமா?
ரெய்னா ஏன் இன்னும் சிஎஸ்கே அணியில் இணையவில்லை…!! சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா???? சோகத்தில் ரசிகர்கள்… !
மார்ச் மாதம் தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி , ஹரி ஷங்கர். ரெட்டி , ருதுராஜ் ஆகிய வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டனர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்- ரவுண்டர் சென்னை அணியில் இணைந்துள்ளார். இருந்தாலும் ஏன் சுரேஷ் ரெய்னா இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை ??? என்ற கேள்வி எழுகிறது.
சமுகவலைத்தளங்களில் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டும் ஐபிஎல் விளையாட மாட்டார் , அவருக்கு இன்னும் பிரச்சனை முடியவில்லை என்று பல கருத்துக்கள் வந்துள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி சி.இ.ஓ. காசிவிஸ்வநாதன் ரெய்னா வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி சிஎஸ்கே அணியில் இணைவார் என்றும். அரசு உத்தரவு படி 7 நாட்கள் அவர் தனிமையாக இருப்பர் என்று கூறியுள்ளார்