சிஎஸ்கே ரசிகர்கள் தயாரா ?? இம்ரான் தாஹிர் ரெடி ஆயிட்டாரு … சந்தோஷத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் வெறும் வீரர்கள் மட்டுமில்லை அதற்கும் மேலே என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்கள்கள், வீரர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி பார்ப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அதுமட்டுமின்றி சென்னை அணியின் பல வீரர்கள் தமிழ் பேச முயற்சித்துள்ளார்கள்.

உதாரணத்துக்கு ஹர்பாஜன் சிங், அவரது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை ஐபிஎல் போட்டியின் போது தமிழில் பகிர்ந்துள்ளார். இப்பொழுது தென்னாபிரிக்கா வீரர் சூழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட் செய்து தமிழ் மக்களையும் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அருமையான சூழல் பந்துவீச்சாளர் பட்டியலில் ஐவரும் ஒருவர் என்றே சொல்லலாம். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் இவரை அணியில் ஏன் எடுக்கவில்லை என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. சென்னை சூப்பர் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகவும் ஒரு மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளது.

பல போட்டிகளில் தோற்ற போது பல ரசிகர்கள் ஏன் இம்ரான் தஹார் அணியில் இல்லை, ஒரு வேளை அவர் இருந்தால் நிச்சயம் போட்டியில் ஏதாவது ஒரு மாற்றம் இருக்கும் என்று பல ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

சிஎஸ்கே ரசிகர்கள் தயாரா ?? இம்ரான் தாஹிர் ரெடி ஆயிட்டாரு … சந்தோஷத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்…

வருகின்ற ஐபிஎல் 2021 போட்டி , ஏப்ரல் மாதத்தில் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. அதாவது இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணியும் தயாராகி வருகின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஆரமிக்கலங்களா ? என்ற பதிவு செய்துள்ளனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழில் இம்ரான் தாஹிர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். என்னவென்றால் ” ஆரமிச்சிட்டா போச்சு .. நல்ல தரமான சிறப்பான சம்பவங்கள் கத்துக்கிட்டு இருக்கு ..இப்போ இல்லைனா எப்போவும் இல்ல ..விடக்கூடாது சத்தியமா விடவே கூடாது …பக்கத்தானே போறீங்க இந்த காளி ஓட ஆட்டத்தை … ஒரு தடவைதான் தவறும் “.. என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். வருகின்ற ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி விளையாட போகிறது என்ற ஆர்வம் அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.