சென்னை வீரர் அதிரடியாக ஓய்வை அறிவித்துள்ளார் ; அப்போ சென்னை அணி நிலைமை ? அவ்வளவு தானா ?

0

ஐபிஎல் 2022:

ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 60 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

சென்னை அணி :

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது சென்னை அணி. அதனால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை.

அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மகேந்திர சிங் தோனி-க்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தது சென்னை நிர்வாகம். ஆனால் சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடி வந்த காரணத்தால், சென்னை அணி நிர்வாகம் அதிரடியான முடிவை கைப்பற்றியது.

இதனை பற்றி பேசிய சென்னை அணி : ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் மாறி வருகிறது. அவரது பங்களிப்பு சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அவருக்கு கேப்டன் பதவியால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.”

அதனால் தான் மீண்டும் இந்த முடிவை கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். அதனால் மீண்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இருப்பினும் இன்னும் இரு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டதுதான் உண்மை.

சென்னை வீரர் ஓய்வு:

சென்னை அணியின் முக்கியமான வீரராக திகழும் அம்பதி ராயுடு இந்த ஆண்டு முடிந்தவியுடன் நான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார் அம்பதி ராயுடு. எனவே ஐபிஎல் 2022 போட்டி தான் அம்பதி ராயுடுவுக்கு இறுதி ஐபிஎல் வருடம். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ், ரசிகர்களுக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அம்பதி ராயுடு இடத்திற்கு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சென்னை அணிக்கு கிடைக்குமா ?? அப்படி யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here