Csk அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னணி வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்….யார் அந்த வீரர்???

0

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஏனென்றால் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் 10 புள்ளிகள் எடுத்த நிலையில் புள்ளிபடியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே – ஆஃப் குள் வராமல் வெளியேறுவது. இதனால் சென்னை சூப்பர் வீரர்கள் மிகவும் வேதனையுடன் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரே போட்டிதான் இருக்கிறது அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் இந்தியாவுக்கு நாடு திரும்ப உள்ளனர்.

12 ஆண்டுகளில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே- ஆஃப் குள் வராமல் போவது. இதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் முழ்கியுள்ளனர். சென்னை அணி இந்த மோசமான விளைவுக்கு சென்னை அணியன் கேப்டன் தோனி , கெதர் ஜாதவ் தான காரணம் என்று பலர் கூறியுள்ளனர்.

சமுகவலைதலங்களில் கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சனம் செய்பவர்களும் சரமாரியாகபதிவுகளை சென்னை அணிக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் வைப்பு தரவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினார்.

Csk அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னணி வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்….யார் அந்த வீரர்???

சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வாட்சன் சென்னை அணியில் நல்ல ஒரு தொடக்க வீரராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வாட்சன் இந்த ஆண்டு அவருக்கு சாதகமாக அமையவில்லை. அதுமட்டுமின்றி சில போட்டிகளில் அவருக்கு பதிலாக பல வீரர்கள் மாறியுள்ளார்.

எல்லாரும் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எல்லாரும் கூறி வந்த நிலையில் , அதற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி.: அடுத்த ஆண்டு நான் கண்டிப்பாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக வாட்சன் ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here