CSK அணியில் ஏற்பட போகும் முக்கியமான மாற்றம் இதுதான் ; CSK அணிக்கு இனி தொடர் வெற்றியா ?

ஐபிஎல் 2022: ஐபிஎல் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 34 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022யில் லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்தது பிசிசிஐ.

அதனால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் 2022. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளை வைத்து புள்ளிபட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும், குஜார்ட் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

இதில் சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது சென்னை அணி. அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கும்..!

அப்படி இல்லையென்றால் ஐபிஎல் 2020 நடந்தது போல மிகவும் மோசமான நிலைக்கு நிச்சியமாக சென்னை தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி இறுதி வரை போராடி வென்றது சென்னை அணிக்கு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாளை மறுநாள் 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர்.

உத்தேச ப்ளேயிங் 11 விவரம் ;

ஓப்பனிங் பேட்ஸ்மேன் : ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இருவரும் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளனர். கடந்த ஆண்டு டூப்ளஸிஸ் மற்றும் ருதுராஜ் பார்ட்னெர்ஷிப் போல அமையவில்லை என்றாலும், ஒருவர் மாற்றி ஒருவர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

மிடில் ஆர்டர் : மிச்சேல் , அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி உள்ளனர். இதில் நிச்சியமாக ஏதாவது இருவர சிறப்பான பார்ட்னெர்ஷிப் ஏற்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. துபே அவ்வப்போது அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். ஆனால் ஒரு சில தருணங்களில் மிகவும் மோசமான நிலையில் ஆட்டம் இழந்து விடுகிறார்.

பவுலர்கள் : பிரிட்டோரியஸ், மஹீஸ் தீக்சஹானா அல்லது மதீஷா பாத்திரன அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் மதீஷ் தீக்சஹானா இதுவரை விளையாடிய போட்டிகளில் அவ்வப்போது விக்கெட்டை கைப்பற்றியுள்ள நிலையில் அதிக ரன்களை கொடுத்துள்ளார். அதனால் இந்த மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!