இது கிரிக்கெட் போட்டிதானா இல்லை வேற ஏதாவதா ? ரிஷாப் பண்ட் இப்படியெல்லாம் செய்யலாமா ? கடுப்பான முன்னாள் வீரர்கள்

நேற்று 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதிலும் தொடக்க வீரரான ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 222 ரன்களை அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

அதில் ஜோஸ் பட்லர் 116, படிக்கல் 54, சஞ்சு சாம்சன் 46, ஹெட்மயேர் 1 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. தொடக்கத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறிக்கொண்டு வந்தனர்.

அதிலும் ரிஷாப் பண்ட் அதிகபட்சமாக 44 ரன்களை மட்டுமே அடித்தனர். இறுதிவரை போராடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் வரை போராடி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 207 ரன்களை அடித்தனர். அதில் பிருத்வி ஷாவ் 37, டேவிட் வார்னர் 28, ரிஷாப் பண்ட் 44, லலித் யாதவ் 37, ஷர்டுல் தாகூர் 10 அடித்துள்ளனர்.

அதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதற்கிடையில் ரிஷாப் பண்ட் செய்த செயலால் முன்னாள் வீரர்கள் கடுப்பில் உள்ளனர். இறுதி ஓவரில் 36 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்பொழுது ரோவ்மன் தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்தார்.

அப்பொழுது பவுலர் obed McCoy வீசிய பந்து NO Ball ஆனது. அதனை மைத்தனத்தில் இருந்த நடுவர் No Ball கொடுக்காததால் Dug out ல் இருந்த அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோவமடைந்தனர். இதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பீட்டர்சன் கூறுகையில் ;

“இது நல்ல ஒரு விளையாட்டு, அதனால் இந்த மாதிரி செய்வது சரியாக இல்லை. அதுமட்டுமின்றி, ஒரு பயிற்சியாளர் கிரவுண்ட் -குள் பந்து அங்கு இருக்கும் நடுவரிடன் சண்டை போடுவது சரியாக இல்லை. நிச்சியமாக மக்கள் ஏதாவது தவறு செய்வது வழக்கம் தான்.”

“நிறைய முறை தேவையில்லாமல் LBW விக்கெட் கொடுத்துள்ளனர். இந்த மாதிரி தவறுகள் அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகளில் நடந்து கொண்டு தான்வருகிறது. எனக்கும் ஸ்வான்னி ஆகிய இருவருக்கும் கிரிக்கெட் அதிக முறை விளையாட அனுபவம் உள்ளது. அதனால் இந்த நிகழ்வு நிச்சியமாக கிரிக்கெட் போட்டிக்கு மோசமான நிலை தான்.”

” அதுமட்டுமின்றி அணியில் இருக்கும் ஒரு சீனியர், இப்படியெல்லாம் செய்யலாமா ? அதனை மட்டும் ஒப்புக்கொள்ளவே முடியாது. இது போன்ற நிகழ்வுகள் நிச்சியமாக இதற்குமேல் நடக்கவே கூடாது என்று கூறியுள்ளார் பீட்டர்சன்.”

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது அஷாருதீன் கூறுகையில் ;” டெல்லி கேபிட்டல்ஸ் அணி செய்த செயல் நிச்சியமாக விளையாட்டுத்திறனுக்கு மிகவும் மோசமான ஒன்று. அதுமட்டுமின்றி, இதனை சுத்தமாக ஒத்துக்கொள்ளவே முடியாது என்று கூறியுள்ளார் முகமது அஷாருதீன்.

கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் சொல்லுங்க டெல்லி கேபிட்டல்ஸ் அணி செய்தது சரியா ?? தவறா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!