நாளுக்கு நாள் இவருடைய பவுலிங் அசத்தலாக தான் உள்ளது ; அதனால் சென்னை அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை ; ரவீந்திர ஜடேஜா ஓபன் டாக்

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக இந்த கொரோனா சூழ்நிலையிலும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதம்’இந்த போட்டிகள் நடைபெற உள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு இரு (லக்னோ மற்றும் குஜராத்) போன்ற அணிகளை அறிமுகம் செய்துள்ளதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. இருப்பினும் இந்த முறை சென்னை அணிக்கு மிகவும் மோசமான நிலை உருவாகியுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் சரியான பவுலிங் இல்லாதது தான்.

தீபக் சஹார் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட போவதில்லை என்றும் சென்னை அணி உறுதி செய்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

அதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதில் சென்னை அணி இறுதி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்பொழுது சென்னை அணியின் பினிஷர் மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

இதனை பற்றி பேசிய ஜடேஜா ; “எங்கள் அணியில் முகேஷ் சவுத்திரி, இப்பொழுதெல்லாம் ஸ்விங் பவுலிங் செய்ய தொடங்கிவிட்டார். அதுமட்டுமின்றி, எங்களுக்கு விக்கெட்டை தேவை என்ற நிலையில் சரியாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றி கொடுத்துள்ளார் முகேஷ்.”

“நிச்சியமாக நாளுக்கு நாள் இவருடைய பவுலிங்கில் முன்னேற்றம் தெரிகிறது. அதுமட்டுமின்றி, இறுதியாக நாங்கள் விளையாடிய போட்டியில் நிச்சியமாக மகேந்திர சிங் தோனி இறுதி வரை விளையாடினால் நிச்சியமாக சென்னை அணி வெய்ட்ரி பெரும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.”

“இன்னும் தோனியின் பசி ஆறவில்லை. இனிவரும் போட்டிகளிலும் நிச்சியமாக சிறப்பாக விளையாடுவார். அவர் இந்திய அணிக்கு மட்டும் சிறந்த பினிஷர் இல்லை, ஐபிஎல் போட்டிகளிலும் இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றி கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.”