சென்னை அணியின் புதிய ப்ளேயிங் 11 இதுதான் ; மாற்றங்களுடன் களமிறங்க போகும் சென்னை அணியின் விவரம் இதோ ;

0

சென்னை சூப்பர் கிங்ஸ் ;

ஐபிஎல் 2022 போட்டிகளில் சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறது. ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா ? என்பதே சந்தேகம் தான். ஏனென்றால் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெண்றுள்ளது.

அதனால் சென்னை அணி புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளனர். சென்னை அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளது. அதில் சென்னை அணி எப்படியாவது வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற அதிக வாய்ப்புகள் உள்ளனர். என்ன செய்ய போகிறது.

நாளை போட்டி ;

நாளை இரவு 7:30 மணியளவில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் ஆசோஸியேஷன் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளனர்.

இதுவரை இந்த இரு அணிகளும் 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சென்னை அணி அதிகபட்சமாக 12 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி 5 முறையும் வென்றுள்ளது.

சென்னை அணியின் ப்ளேயிங் 11 விவரம் இதோ ;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை ரவீந்திர ஜடேஜா வழிநடத்தி வந்துள்ளார். ஆனால் நாளை முதல் இனிவரும் போட்டிகளில் மீண்டும் தோனி தான் அணியை வழிநடத்த போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்பனிங் பேட்ஸ்மேன் : ருதுராஜ் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இருவரும் தான் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய உள்ளனர். அதில் மாற்றமே இல்லை. ஏனென்றால், ருதுராஜ் அல்லது ராபின் உத்தப்பா இதில் யாராவது ஒருவர் ஆட்டம் இழந்தாலும், மற்றொருவர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

மிடில் ஆர்டர் : இந்த முறை நிச்சியமாக மிச்சேல் சண்ட்னர் -க்கு பதிலாக மொயின் அலி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளனர். ஏனென்றால் மொயின் அலி சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தால் தான் மிச்சேல் சண்ட்னர் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றார்.

ஆனால் மொயின் அலி-யின் காலில் அடிபட்டுள்ளதாக சமீபத்தில் தான் சென்னை அணி அறிவித்தது. ஒருவேளை அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் சரியாகிருந்தால் நிச்சியமாக ப்ளேயிங் 11 ல் இடம்பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. சிவம் துபே, அம்பதி ராயுடு , ஜடேஜா மற்றும் தோனி களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளனர்.

பவுலிங் :

சென்னை அணியின் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் தீபக் சஹார் இடத்திற்கு இப்பொழுது முகேஷ் சவுத்திரி விளையாடி வருகிறார். அவருடைய பவுலிங் நாளுக்கு நாள் மிகவும் சிறப்பாக உள்ளது தான் உண்மை.

இருப்பினும், மஹீஸ் தீக்சஹானா வுக்கு பதிலாக ராஜ்வர்தன் அல்லது மதீஷா பதிரான இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் சூழல் பந்து வீச்சாளரான மஹீஸ் தீக்சஹானா அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டை கைப்பற்றி வந்தாலும், ரன்களை அதிகமாகவே கொடுத்து வருகிறார் என்பது தான் உண்மை.

அதனால் நிச்சியமாக இந்த மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளனர். பின்னர் ப்ராவோ, பிரிட்டோரியஸ் போன்ற பவுலர்கள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களே..! சென்னை அணியின் அருமையான ப்ளேயிங் 11 ல் யார் யார் இடம்பெறுவார்கள் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here