ரவீந்திர ஜடேஜா இனி சென்னை அணி கேப்டன் இல்லையாம் ; இவர் தான் இனி கேப்டன் ; ரசிகர்கள் மகிழ்ச்சி ;

0

ஐபிஎல் 2022:

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை மொத்தம் 10 அணிகள் என்பதால் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இதுவரை 43 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகள் சென்னை அணிக்கு சாதமாக இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதனால் தொடர்ந்து வெற்றிகளை கைப்பற்ற சென்னை அணி திணறுகின்றனர்.

சென்னை அணி கேப்டன் :

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. ஆனால் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேயா போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

அதனால் இன்னும் சில ஆண்டுகளில் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் இரு தினங்களுக்கு முன்பு தான் ரவீந்திர ஜடேஜா இனிவரும் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடுவார், வழிநடத்துவார் என்று உறுதியான தகவலை வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஆனால் அனைவரும் எதிர்பார்த்த அளவிற்கு ஜடேஜா சரியாக அணியை வழிநடத்தவில்லை என்பது தான் உண்மை. அதனால் தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வரை அவர் கேப்டனாக இருக்கட்டும் என்று பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

சென்னை அணியின் புதிய கேப்டன் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , சற்று முன் அறிவித்த தகவலின் படி இனிவரும் போட்டிகளில் தோனி மீண்டும் கேப்டனாக வழிநடத்த போவதாக அறிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு என்பது இருக்கும்.

கிரிக்கெட் ரசிகர்களே.. ! நீங்க சொல்லுங்க சென்னை அணியை யார் வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்கள் இங்கே வரவேற்க படுகின்றனர். கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here