தோனியின் செல்ல பிள்ளையாக மாறிய வேகப்பந்து வீச்சாளர் ; இனிமேல் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. இதுவரை 35 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் தொடரில் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழ்கிறது சென்னை அணி. அதிலும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பேட்டிங் வலுவாக இருக்கிறது. குறிப்பாக டேவன், ரஹானே, ஷிவம் துபே, ருதுராஜ் போன்ற வீரர்களின் பங்களிப்பு சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது.

சென்னை அணியின் அசைக்க முடியாத பேட்டிங் ஆர்டர் :

தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வரும் ருதுராஜ் மற்றும் டேவன் கான்வே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். ஒருவர் விக்கெட்டை இழந்தாலும் மற்ற வீரர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இதனை அடுத்து ரஹானே இந்த ஆண்டு தான் சென்னை அணியின் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் 2023 முதல் இரு போட்டிகளில் இடம்பெறவில்லை, இருப்பினும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட முதல் போட்டியில் இருந்து அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி வருகிறார் ரஹானே. 5 போட்டிகளில் விளையாடிய ரஹானே 209 ரன்களை அடித்துள்ளார். இவரை அடுத்து ஷிவம் துபே சிக்ஸர் விளாசி வருகிறார்.

அதனால் ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரஹானே போன்ற வீரர்கள் விளையாடுவதால் மிடில் ஆர்டர் வலுவாக இருக்கின்றனர்.

இளம் வீரர்களை நம்பி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

தோனி ஓய்வுக்கு பிறகு இளம் வீரரான ருதுராஜ் தான் கேப்டனாக விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஆகாஷ் சிங், மஹீஸ் தீக்ஷண, மதீஷா பாத்திரான, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களை கொண்டு விளையாடி வருகிறது சென்னை.

அதிலும் குறிப்பாக இலங்கை அணியை சேர்ந்த மதீஷா பாத்திரன அட்டகாசமாக பவுலிங் செய்து வருகிறார். ஜூனியர் மலிங்க என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகின்றனர். ஆமாம், இலங்கை அணியின் முன்னாள் வீரரான மலிங்க பவுலிங்கை எதிர்கொள்ளவது அவ்வளவு சுலபம் கிடையாது.

இப்பொழுது மலிங்க இல்லாததை மதீஷா பாதிரான இடத்தை பிடித்துவிட்டார். அட்டகாசமாக பவுலிங் வரும் பாத்திரன இனிவரும் போட்டிகளிலும் சென்னை அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாளை இரவு 7:30 மணியளவில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர்.

அதனால் இரு அணிகளு தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இதுவரை ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் 27 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் சென்னை அணி அதிகபட்சமாக 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் உத்தேச அணியின் விவரம் :

டோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பாத்திரன, துஷார் தேஷ்பாண்டே, மஹீஸ் தீக்ஷண, மொயின் அலி.