இந்த பையன் தினமும் இரண்டு மணிநேரம் பேட்டிங் பயிற்சி செய்வார் ; இந்த பையன் கடைசி ஓவர் விளையாடினால் அதிரடிதான் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

ஐபிஎல் : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் அமையவில்லை என்றாலும் மிடில் ஆர்டரில் மில்லர், மனோகர் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ந்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த குஜராத் அணி 207 ரன்களை அடித்துள்ளனர். அதில் சக 4, சுப்மன் கில் 56, ஹர்டிக் பாண்டிய 19, மில்லர் 46, மனோகர் 42, ராகுல் திவேதிய 20* போன்ற வீரர்கள் ரன்களை அடித்துள்ளனர். பின்பு, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம் போல தோல்வி தான் காத்திருந்தது.

தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து கொண்டே வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இருப்பினும் மிடில் ஆர்டரில் நேஹால் வதேரா அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினார். இறுதி ஓவர் வரை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழந்த நிலையில் 152 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற நிலையில் 7வது இடத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “டி-20 போட்டிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும். நான் கேப்டனாக என்னுடைய உணர்வை ஆதரிக்கிறேன். அதுமட்டுமின்றி, பயிற்சியாளர் ஆஷிஷ் -ம் நானும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறோம். மும்பை அணியில் டிம் டேவிட் மற்றும் க்ரீன் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடும் வீரர்.”

“ஆனால் அவர்கள் வேகப்பந்து வீச்சை சுலபமாக அடித்துவிடுவார்கள் என்ற காரணத்தால், நாங்கள் சுழல் பந்து வீச்சாளரை பவுலிங் செய்ய வைத்தோம். அதுமட்டுமின்றி எங்கள் அணியில் மனோகர் எப்பொழுது இரண்டு மணி நேரத்துக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அதனால் தான் இறுகி நேரத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்துள்ளார் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here