நாங்க பண்ண பிளான் எதுவும் நடக்கவில்லை ; இவர் சரியாக விளையாடிருக்க வேண்டும் ; விராட்கோலி பேட்டி ;

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற விராட்கோலி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கியது கொல்கத்தா அணி.

கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த கொல்கத்தா அணி 200 ரன்களை அடித்தனர். அதில் ஜேசன் ராய் 56, ஜெகதீஷன் 27, வெங்கடேஷ் ஐயர் 31, நிதிஷ் ரானா 48, ரிங்கு சிங் 18* ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், தொடக்க வீரரான டூப்ளஸிஸ் 17 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்பு ஷாஹஸ் அகமத் மற்றும் மேக்ஸ்வெல் அடுத்தது விக்கெட்டை பறிகொடுத்த காரணத்தால் பெங்களூர் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

தொடர்ந்து விக்கெட்டை இழந்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் வரை விளையாடிய நிலையில் 179 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது கொல்கத்தா அணி. அதனால் 7வது இடத்தில் கொல்கத்தா அணியும், 5வது இடத்தில் பெங்களூர் அணியும் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய விராட்கோலி கூறுகையில் : ” உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் வெற்றியை அவர்களுக்கு கொடுத்துவிட்டோம். அதனால் எங்களுக்கு தான் தோல்வி கிடைக்க வேண்டும்.எங்களுடைய தரத்தில் நாங்கள் விளையாடவில்லை. போட்டியை கவனித்து பார்த்தல் கிடைத்த வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம்.”

“அதுமட்டுமின்றி, 25 -30 ரன்களை தேவையில்லாமல் விட்டுக்கொடுத்தோம். இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது நிச்சியமாக பார்ட்னெர்ஷிப் செய்ய வேண்டியது முக்கியமான ஒன்று. அது சிறப்பாக அமைந்தால் மட்டுமே வெற்றியை கைப்பற்ற முடியும். இந்த தோல்வியால் எதுவும் மாறப்போவதில்லை.”

“இருப்பினும் இனிவரும் போட்டிகளில் நடந்த தவறை மீண்டும் செய்யாமல் முன்னேறிக்கொண்டு போகவேண்டுமென்று கூறியுள்ளார் விராட்கோலி.” இந்த வருடம் ஆவது ஐபிஎல் 2023 கோப்பையை வெல்லுமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.”