இந்த முறை முயற்சி செய்தும் சென்னை அணியால் கைப்பற்ற முடியாமல் போன வீரர் ; பவுலர் மிஸ் ஆகிடுச்சு ;

0

ஐபிஎல் : உலகத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி என்றால் அது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் தான். இது கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்பு ரசிகர்கள் வரவேற்பை பெற்றதால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 15 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 16வது சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரம் :

கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இடம்பெற்றனர். அதனால் மெகா ஏலம் நடைபெற்றதால், அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஆனால், இந்த முறை அப்படி இல்லை….! முடிந்தவரை முக்கியமான வீரர்களை தக்கவைத்து கொண்டு ஒரு சில வீரர்களை மட்டும் வெளியேற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் சென்னை அணியில் மகேந்திர சிங் தோனி, ஷிவம் துபே, முகேஷ் சவுத்திரி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, தீபக் சஹார் போன்ற வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த ஏலத்தில் மற்ற அணி வீரர்களை ஏலத்தில் விடப்படும் பட்சத்தில் நாம் நேரடியாக பணத்தை கொடுத்து வாங்கலாம். அதில் கடந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இடம்பெற ஷர்டுல் தாகூரை அணியில் இருந்து வெளியேற்ற போவதாக கூறியுள்ளனர்.

அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் ஷர்டுல் தாகூரை விலைக்கு வாங்க பல அணிகள் அதிகப்படியான முடியற்சிகளை கையில் எடுத்தனர். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி அணியிடம் இருந்து ஷர்டுல் தாகூரை கைப்பற்றியுள்ளனர். இதில் சென்னை, பெங்களூர், பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் போட்டி போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷர்டுல் தாகூர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய நிலையில் கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை கைப்பற்றியது. கடந்த ஐபிஎல் 2022ல் 14 போட்டிகளில் விளையாடிய ஷர்டுல் தாகூர் 15 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, பேட்டிங் செய்து 120 ரன்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி வெறும் 8 வீரர்களை தக்கவைத்து கொண்ட நிலையில் எந்தெந்த வீரர்களை கைப்பற்றினால் வலுவான அணியாக இருக்க முடியும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here