கவலைய விடுங்க ; அதுதான் இந்திய இருக்கே , அங்க பார்த்துக்கலாம் ; ஷோயிப் அக்தர் ஓபன் டாக் ;

0

கவலையே வேண்டாம், அடுத்த ஆண்டு இந்தியாவில் பார்த்துக்கொள்ளலாம் ; சோயிப் அக்தர் ஆறுதல்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறப்பாக நிறைவடைந்துள்ளது. அதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்களை அடித்தனர். பின்பு 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

சரியாக 19 ஓவர் முடிவில் 139 ரன்களை அடித்த நிலையில் 5 விக்கெட்டை வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை பெற்றது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தான் அணியின் போராட்டம் :

இந்த ஆண்டு சூப்பர் 12 லீக் தொடரில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணி குரூப் 2ல் இடம்பெற்றனர். அதில் முதலில் இரு போட்டிகளில் (இந்தியா, ஜிம்பாபே) தொடர்ந்து தோல்வி பெற்றதால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தன. ஆனால் இறுதி நேரத்தில் தென்னாபிரிக்கா அணி தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்புகள் இருந்தன. அதற்கு ஏற்ப தென்னாபிரிக்கா அணி தோல்வி பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பின்பு அரையிறுதி சுற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான். ஆனால் இறுதியில் போட்டியில் மோசமான பேட்டிங் செய்த காரணத்தால் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. இங்கிலாந்து அணியிடம் தோல்வி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியை விமர்சனம் செய்த பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், இறுதி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி பெற்ற நிலையில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் வென்றுவிடலாம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர். மேலும் இதனை பற்றி கூறுகையில் : “பாகிஸ்தான் இறுதி போட்டியில் தோல்வி பெற்றது ஒன்று கவலையில்லை. நான் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இருப்பேன். ஷாஹீன் அப்ரிடி-க்கு அடிபட்டது தான் போட்டியின் திருப்புமுனையே. நான் போட்டி இறுதி ஓவர் வரி செல்லும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை, இருந்தாலும் பரவாயில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.”

“இங்கிலாந்து வீரர்களின் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்தனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அவர்களுக்கு (இங்கிலாந்து) பிரச்சனையாக இருந்தது சிறந்த விஷயம் தான் என்று கூறியுள்ளார் அக்தர்.”

மேலும் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை பற்றி பேசிய அக்தர் கூறுகையில் : ” கவலை வேண்டாம், பிட்னெஸ் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் எப்படி விளையாட வேண்டுமென்று தான் யோசிக்க வேண்டும். யாரெல்லாம் ஹீரோ என்று நிரூபிக்க வேண்டுமென்றால் வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வென்று உலகக்கோப்பையை பாகிஸ்தான் (ஹோம்) க்கு கொண்டு வாருங்கள். இந்த உலகக்கோப்பை போனாலும் பரவாயில்லை, ஆனால் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை நம்முடையதாக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார் அக்தர்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here