வீடியோ : எதிரிக்கு கூட இந்த மாதிரியான நிலைமை வரவே கூடாது ; ஐபிஎல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய போட்டி ;

ஐபிஎல் : நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐடென் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அதிலும் ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி 214 ரன்களை அடித்தனர்.

அதில் ஜெய்ஸ்வால் 35, ஜோஸ் பட்லர் 95, சஞ்சு சாம்சன் 66* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. தொடக்க வீரர்களான அன்மோல்ப்ரீட் சிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இருப்பினும் அபிஷேக் சர்மா, ராகுல், க்ளென் பிலிப்ஸ், அப்துல் சமத் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் இறுதி ஓவரில் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சன்ரைசர்ஸ் அணி. 2வது பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கான வாய்பு உறுதி செய்தது சன்ரைசர்ஸ்.

இருப்பினும் இறுதி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அப்பொழுது, சந்தீப் சர்மா யாருமே எதிர்பாராத வகையில் நோ-பால் வீசினார். அதனால் ராஜஸ்தான் வீரர்களுக்கு மற்றுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால், வெற்றி உறுதி என்று நினைத்து கொண்டாடிய போது நோ-பால் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த நோ-பாலில் அப்துல் சமத் சிக்ஸர் அடித்து சன்ரைசர்ஸ் அணியை வெற்றிபெற செய்தார். அதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி.

வீடியோ :

ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு :

இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிச்சியமாக ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும். அடுத்ததாக சென்னை அணி இனி வரும் போட்டிகளில் குறைந்தது 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் 3 போட்டியிலும், கொல்கத்தா, டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணி இனிவரும் போட்டிகளில் வென்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டு எந்த நான்கு அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போகின்றனர்..! அதில் யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் ? உங்கள் கருத்து ?