ஐபிஎல் 2022 ஏலம் ; மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை கைப்பற்ற போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ; List இதோ;

0

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மெகா ஏலம் நாளை பெங்களூரில் காலை 11 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த முறை இரு நாட்கள் (12 மற்றும் 13)ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மற்ற 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதன்படி அவரவர் அணிக்கு ஏற்ப வீரர்களை தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், மற்ற வீரர்களை அனைவரும் ஏலத்தில் பங்கேற்க போவதாகவும் பிசிசிஐ கூறியது. ஐபிஎல் ஆரம்பித்த நாள் முதல் கடந்த ஆண்டு வரை வரை சிஎஸ்கே அணி மட்டும் தான் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு அதிக முறை தேர்வாகியது. இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமாக 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த முறை மெகா ஏலம் என்பதால் மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை சென்னை அணி குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் முதல் வீரராக நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் பெல்ட் தான். இவர் கடந்த இரு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான பவுலராக வளம் வந்துள்ளார். ஆனால் டிரென்ட் பெல்ட் மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பவுலர்களாக திகழ்ந்த தீபக் சஹார் , ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்படவில்லை. அதனால் டிரென்ட் பெல்ட் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவதாக ராபாடா இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார். ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் தக்கவைப்படவில்லை. 2020ஆம் ஆண்டு ராபாட தான் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றினார்.

அதில் 17 போட்டிகளில் பவுலிங் செய்த ராபாட மொத்தம் 30 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதனால் நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை கைப்பற்ற முயற்சி செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவதாக ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த பேட் கம்மின்ஸ் சிஎஸ்கே அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ஜோஸ் ஹேசல்வுட் எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினாரோ. அதேபோல, பேட் கம்மின்ஸ் அணியில் சிறப்பாக ஒரு பவுலர் அமையும். இதுவரை மொத்தம் 37 போட்டிகளில் விளையாடிய பேட் கம்மின்ஸ் மொத்தம் 38 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here