தேர்வாளர்களை திரும்ப பார்க்க வைத்த இந்திய வீரர் இவர் தான் ; பையன் பவுலிங் அப்படி ..! முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் பேட்டி ;

0

இன்று மதியம் 1:30 மணியளவில் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியை கைப்பற்றி தொடரையும் கைப்பற்றியுள்ளது. அதனால் இன்றைய போட்டி இந்திய முக்கியம் இல்லை.

இந்திய கிரிக்கெட் அவ்வப்போது இளம் வீரர்கள் மற்றும் புதிய வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு தான் வருகிறது. ஆமாம்..! அதில் ஒருவர் தான் பிரஷித் கிருஷ்ணா. கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார்.

அதனை அடுத்து இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் பிரஷித் கிருஷ்ணா. முதல் போட்டியில் 2 விக்கெட் மற்றும் இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதனை பற்றி பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான இயன் பிஷப் கூறுகையில் ;

பிரஷித் கிருஷ்ணா ஒரு திறமையான பவுலர். அவர் பவுலிங் செய்யும் விதம் இந்திய அணியின் தேர்வாளர்களிடம் எடுத்து சென்றுள்ளது. நான் ஒரு முன்னாள் வீரராக பேசுகிறேன், அவர் (பிரஷித் கிருஷ்ணா) பவுலிங் செய்யும் விதம் அப்படி இருக்கும். அவர் பவுலிங் செய்யும் இடத்தை பார்த்தாலே நன்கு தெரியும் அவரது எதிர்காலம் எங்கு என்பது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்கள் அணியில் இல்லை. ஆனாலும் முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படி ஷார்ட் பவுலிங் செய்தார்களோ, அதனை சரியாக கவனித்துள்ளார் பிரஷித்.

அதனால் உயரமாக இருப்பதால், அவர் ஷார்ட் பவுலிங் செய்து சிறிது அளவுக்கு பென்ஸ் செய்து அதற்க்கான பலனை அனுபவித்து வருகிறார் பிரஷித் கிருஷ்ணா என்று கூறியுள்ளார் இயன் பிஷப். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணியில் பிரஷித் கிருஷ்ணா இடம்பெறவில்லை.

அதனால் இன்றைய மூன்றாவது போட்டி தான் இந்த சீரியஸ் போட்டிகளில் அவருக்கான இறுதி போட்டி. இன்றைய போட்டியிலும் அதிக விக்கெட்டை கைப்பற்றுவாரா பிரஷித் கிருஷ்ணா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here