ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் டி-20 போட்டிகள், ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது வெற்றிகரமாக 15வது சீசன் தொடங்கியுள்ளது.
எப்படி சென்னை அணிக்கு 2020ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருந்ததோ, அதேபோல தான் இப்பொழுது சென்னை அணி மோசமான நிலையில் உள்ளது. ஏனென்றால் இதுவரை 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை அணிக்கு சரியான பவுலிங் இல்லை என்பது தான உண்மை. தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் தான்.
இலங்கை அணியின் வீரர் மதீஷ் தீக்சஹானா சென்னை அணியில் அனைத்து போட்டிகளும் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆனால் அதனால் சென்னை அணிக்கு ஏதாவது பலனா ? என்று கேட்டால் அது இல்லை என்பது தான் உண்மை. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டை எடுத்துள்ளார்.
ஆனால் வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் அவரது பவுலிங் அதிக ரன்களை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் நியூஸிலாந்து அணியின் வீரர் ஆடம் மில்னே ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகினார். அதனால் அவருக்கு பதிலாக இலங்கை அணியை சேர்ந்த மதீஷா பாத்திரான அணியில் இடம்பெற்றுள்ளார்.
இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர். கடந்த சில போட்டிகளில் சென்னை அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் விளையாடி வந்தனர். அதில் மொயின் அலி அல்லது மிச்சேல் சண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, மதீஷ் தீக்சஹானா போன்ற மூன்று வீரர்கள் இருந்தன. இந்த முறை மதீஷ் தீக்சஹானாவுக்கு பதிலாக புதிய வீரரான மதீஷா பாத்திரான அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக சென்னை அணியால் விரைவாக விக்கெட்டை கைப்பற்ற முடியும்…!
என்ன செய்ய போகிறது சென்னை அணி? சென்னை அணியின் இந்த மோசமான நிலைமைக்கு என்ன காரணமாக இருக்கும். உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.. உங்கள் கருத்துக்களை, மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்..!