இப்படியெல்லாம் பேட்டிங் செய்தால் எப்படி வெல்ல முடியும் ? தோல்விக்கு இதுதான் காரணம் ; ரோஹித் சர்மா

0

நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த 37வது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு சிறப்பான ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் அமைந்தது. கே.எல்.ராகுல் சதம் அடித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 168 ரன்களை அடித்தனர்.

அதில் டி-காக் 10, கே.எல்.ராகுல் 103, மனிஷ் பாண்டே 22, ஸ்டோனிஸ் 0, குர்னல் பாண்டிய 1, தீபக் ஹூடா 10, படோனி 14 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தோல்வியே மிஞ்சியது.

தொடக்க வீரரான இஷான் கிஷான் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் தவித்து வந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி வரை போராடி 8 விக்கெட் இழந்த நிலையில் 132 ரன்களை மட்டுமே அடித்தது. அதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 39, திலக் வர்மா 38 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி. இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளனர். போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் கூறுகையில் :

“எனக்கு தெரிந்து பவுலிங் சரியாக தான் செய்தோம். பிட்ச் நன்றாக தான் இருந்தது. நான் கூட 169 ரன்களை அடித்து விடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இந்த மாதிரி ரன்களை அடிக்க வேண்டும் என்று நிலை உருவாகும் போது நிச்சயமாக பார்ட்னெர்ஷிப் அமைந்திருக்க வேண்டும்.”

“ஆனால் மிடில் ஆர்டர் தேவையில்லாமல் ஷாட் அடிக்க முயற்சி செய்து விக்கெட்டை இழந்து விட்டோம். அதில் நானும் ஒருவன் தான். சரியான தருணம் எங்களுக்கு அமையவில்லை. இதுவரை விளையாடிய போட்டிகளில் நங்கள் சரியாக பேட்டிங் செய்யவே இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”

“உங்களும் முடிந்த வரை சில மாற்றங்களை செய்து, அதில் அப்படியே தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. எப்பொழுதெல்லாம் நாங்கள் தோல்வியை பெற்று வருகிறோமோ, அப்பொழுது எங்களுக்குள் பல பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.”

“இன்னும் எங்களுக்கு போட்டி முடியவில்லை, இன்னும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட போகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா”….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here