ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் 2 போட்டிகள் மட்டுமே வென்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன ஆனால் தொடர்ந்து தோல்விதான் சென்னை அணி சந்தித்து வருகின்றது.
சென்னை அணியில் பேட்டிங் பகுதி நன்றாக இருந்தாலும் பௌலிங் பகுதியில் சிறிது பின்னடைவு தான். ஏனென்றால் பௌலர்கள் அதிகமாக ரன்களை தருவது மட்டுமின்றி அதிக எஸ்ட்ரா ரங்களையும் தருகின்றன அதனால் சென்னை பேட்ஸ்மேனுக்கு அதிக அழுத்தம் ஏற்படும் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் மற்றும் அணியின் கேப்டன் கூறியுள்ளார்.
இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிலேஆஃ-யில் விளையாட முடியும். அதனால் இனிவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி ஆட்டத்தை வெளிப்படுத்துமா ?? என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும். இன்று 29வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் வார்னர் தலைமையிலான சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளன. இதுவரை இந்த இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதமுள்ள 4 போட்டியில் சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுள்ளது.
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் வீரர்கள் யார் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் உள்ளது. !
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ::
கேப்டன் தோனி , வாட்சன் , அம்பதி ராயுடு , டு பிளெஸ்ஸிஸ், ஜடேஜா , பிராவோ , கரண் சர்மா , ஜெகதீசன் , தீபக் சஹர் , தாகூர் .
இதில் சாம் குரான்- க்கு பதிலாக இம்ரான் தஹிர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.ஏனென்றால் கடைசி 3 போட்டிகளில் சரியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த வில்லை. அதனால் இந்த முறை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
ஒருவேளை தாகிர் இடம்பெற்றால் ரன்களை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கைப்பற்றுமா????