சிஎஸ்கே அணியில் சிறிய மாற்றங்களுடன் SRH அணியை வெல்லுமா? யார் அந்த மாற்றம் !!

0

29வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் வார்னர் தலைமையிலான சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளது. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 13 போட்டிகள் மோதியுள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 முறை வெற்றிபெற்றுள்ளது. 4 முறை சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2020யில் இதுவரை 7 போட்டிகள் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அதுமட்டுமின்றி சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டியில்3 வென்றுள்ளது. சென்னையின் தொடர் தோல்வியின் காரணமாக பல ரசிகர்கள் அதிர்ச்சியில் அளித்துள்ளனர். பல வீரர்களை மாற்றினாலும் சென்னை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

கடுப்பான ரசிகர்கள் சென்னை அணியின் கேப்டன் தோனி குழந்தைக்கு கற்பழிப்பு மட்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் தோனியின் பண்ணை வீட்டில் போலீசார் குவிந்துள்ளனர்.

சிஎஸ்கே அணியில் சிறிய மாற்றங்களுடன் SRH அணியை வெல்லுமா? யார் அந்த மாற்றம் !!

சென்னை அணியின் கடைக்குட்டி சிங்கம் என்று அழைக்கப்படும் சாம் குரான் முதல் 4 போட்டிகளில் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் கடந்த 3 போட்டிகளில் அவரது ஆட்டம் சென்னை அணிக்கு உதவவில்லை என்றே சொல்லலாம். அதனால் அவருக்கு பதிலாக இம்ரான் தஹிர் சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத்க்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஒருவேளை இம்ரான் தஹிர் இடம்பெற்றால் ரன்களை குறைக்க முடியும் என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here