ப்ராவோவிற்கு பதிலாக சரியான வீரரை தேர்வு செய்த CSK அணி ; CSK அணியின் பலமே இவர் தான்;

0

ஐபிஎல் : 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர். இது ஒரு குறுகிய ஓவர் போட்டி என்ற காரணத்தால் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றனர்.

அதனால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒருவேளை இந்தியாவில் நடைபெற முடியவில்லை என்றால் கூட தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் நடைபெற்றுள்ளது. இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் இரு தினங்களுக்கு முன்பு தான் சிறப்பாக நடைபெற்றது.

ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை அணி எதிர்கொண்ட சவால் :

சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் மற்றும் தோனியின் நண்பனான பிராவோவை வயது காரணமாக அணியில் இருந்து வெளியேற்றினார்கள். அதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளனர். அதனால் பிராவோ இடத்தில் சிறந்த ஆல் – ரவுண்டரை தேர்வு செய்ய வேண்டிய சூழலில் தான் சென்னை அணி இருந்தது.

பின்பு ஏலத்திற்கு முன்பு 20.45 கோடி கையில் வைத்திருந்த சென்னை அணி 7 வீரர்களை கைப்பற்ற வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டது. அதில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான பென் ஸ்டோக்ஸ்-ஐ சுமார் 16.25 கோடி விலைக்கு கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் சென்னை அணியில் ஒரு சிறந்த ஆல் – ரவுண்டர் விளையாட போகிறார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் வெளியேறியது. அதுவும் புள்ளிபட்டியலில் 4 போட்டிகளில் வென்ற நிலையில் 9வது இடத்தில் இருந்த காரணத்தால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த முறை நிச்சியமாக சென்னை அணி சிறப்பாக விளையாட அனைத்து விதமான வீரர்களும் இருகின்றனர். ப்ராவோவை காட்டிலும் பென் ஸ்டோக்ஸ்-ன் பங்களிப்பு சென்னை அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி கைப்பற்றிய வீரரின் விவரம் :

ரஹானே (50 லட்சம்), பென் ஸ்டோக்ஸ் (16.25 கோடி), ஷைக் ரஷீத் (20 லட்சம்), நிஷாந்த் சிந்து (60 லட்சம்), ஜேமிசன் (1 கோடி), அஜய் மண்டல் (20 லட்சம்), பகத் வர்மா (20 லட்சம்). ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் இரு வெளிநாட்டு வீரர்களும், ஐந்து இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, இன்னும் சென்னை அணியின் கையில் 1.5 கோடி மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here