இவரை ஏலத்தில் எடுத்ததால் தோனிக்கு மகிழ்ச்சி ; CSK அணியின் நம்பிக்கையே இவர்கள் தான் ;

0

கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்ற காரணத்தால் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழ்கிறது சென்னை.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை மகேந்திர சிங் தோனி தான் தலைமை தாங்கி வருகிறார். இதுவரை மொத்தம் 4 முறை கோப்பையை வென்றுள்ளது சென்னை அணி. ஆனால் கடந்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணி தேர்வு செய்ததில் சில தவறுகள் ஏற்பட்டது.

ஆமாம் மொத்தம் 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் இருந்தது சென்னை அணி. அதனால் இந்த ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்று சென்னை அணி தீவிரமான ஆலோசனையில் இருந்தனர். அதற்கு ஏற்ப, இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில் 16.25 கோடி விலை கொடுத்து இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியுள்ளது சென்னை அணி.

அதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதனை பற்றி பேசிய சென்னை அணியின் CEO கூறுகையில் : “இந்த முறை சென்னை அணியில் அதிகப்படியான ஆல் – ரவுண்டர்கள் (ஜடேஜா, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமிசன்) இருப்பது சென்னை அணிக்கு நம்பிக்கையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, 16.25 கோடி விலை கொடுத்து பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றியது தோனி மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.”

சென்னை அணியின் முழு விவரம்:

தோனி, டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜேவர்தன் ஹங்காரகேகர், பிரிடோரிஸ், சான்டனர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்திரி, மதீஷா பத்திரான, சிமர்ஜெட் சிங், தீபக் சஹார், பிரசாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா, ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.

16.25 கோடி விலை கொடுத்து பென் ஸ்டோக்ஸ்-ஐ வாங்கியது சரிய ?

ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி போன்ற முன்னணி வீரர்கள் இருக்கும்போது பென் ஸ்டோக்ஸ்-ஐ இவ்வளவு விலை கொடுத்து வாங்கியது சரிதான ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here