ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காரணத்தால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல்.
இதுவரை மொத்தம் 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் எந்த வீரர்கள் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே அதிக அளவில் எழுந்துள்ளது. சமீபத்தில் தான் அனைத்து அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளனர். அதேபோல அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களின் விவரத்தையும் வெளியிட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் நடைபெற உள்ளதால், முக்கியமான 8 வீரர்களை வெளியேற்றியுள்ளது சென்னை அணி.
அதில், ப்ராவோ, ஆடம் மில்னே, ஆசிப், ஹரி நிஷாந்த், பகத் வர்மா,ராபின் உத்தப்பா, ஜெகதீஸ், கிறிஸ் ஜோர்டான் போன்ற வீரர்களை வெளியேற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பல ஆண்டுகளாக சென்னை அணியில் தொடர்ந்து முக்கியமான வீரராக விளையாடி வரும் ப்ராவோ இந்த முறை தக்கவைத்துக்கொள்ளாமல் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த சென்னை அணியின் நிர்வாகம் ; ப்ராவோ சிறந்த வீரர் தான், இருந்தாலும் வயது காரணமாக தான் அவரை வெளியேற்றிவிட்டோம். அதுமட்டுமின்றி, கிறிஸ் ஜோர்டான் சிறந்த வீரர் தான். ஆனால், இந்தியாவில் விளையாடும் போது அவருடைய தாக்கம் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை என்று கூறியுள்ளனர்.”
சென்னை அணி தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரம் :
மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, டேவன் கான்வே, மொயின் அலி, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, பிரிட்டோரியஸ், சேனாபதி, மிச்சேல் சண்ட்னர், மகேஷ் பாத்திரன, துஷர் தேஷ்பாண்டே, ராஜேவர்தன், முகேஷ் சவுத்திரி, தீபக் சஹார் போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளனர்.