இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமா ? அப்படியென்றால் இந்த பையன் நிச்சியமாக இருக்க வேண்டும் ; ஹர்பஜன் சிங் வேண்டுகோள் ;

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26ஆம் தேதி ஐபிஎல் 2022 இதுவரை வெற்றிகரமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

எப்பொழுதும் இந்திய அணியில் ஒரு வீரர் இடம்பெற வேண்டுமென்றால் அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிருக்க வேண்டும். ஒரு புதிய அல்லது இளம் வீரர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அப்படி தான் இதுவரை பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகள் வந்தாலே போதும் ஒரு வீரரிடம் இருக்கும் நிறை குறை பற்றி பேசுவது வழக்கம் தான். அதேபோல தான் இந்திய அணியில் விளையாட வீரரை புகழ்ந்து பேசியுள்ளார் ஹர்பஜன்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; ” எனக்கு தெரிந்து இந்திய அணியில் விளையாட வேண்டிய இவர் தான் உமர் மாலிக். அதுமட்டுமின்றி, இந்திய உடை மட்டும் தான் அவரிடம் இல்லை. உமர் மாலிக் நிச்சியமாக இந்திய அணியில் இருக்க வேண்டிய வீரர் தான்.”

“அதுவும் வருகின்ற உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதில் உமர் மாலிக் நிச்சியமாக இந்திய அணியில் இடம்பெற்றால் போட்டியின் வெற்றியாளராக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.”

உமர் மாலிக் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் நடராஜனுக்கு பதிலாக அணியில் அறிமுகம் ஆனார். அதில் அவரது பந்து வீச்சு மற்ற வீரர்களை விட வேகமாக இருந்தது. அதனால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி அவரை தக்கவைத்து கொண்டனர். உமர் மாலிக் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 9 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஓவருக்கு 9.13 என்ற விகிதத்தில் ரன்களை கொடுத்துள்ளார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளனர்.