சரியான நேரத்தில் CSK கைப்பற்ற போகும் முக்கியமான வீரர் ; தோனியின் திட்டமாக இருக்கலாம் ;

0

ஐபிஎல் : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிகள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. அதனால் ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடரில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை வெற்றிகரமாக 15 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில் 16வது சீசன் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் தொடங்கிய போதில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் அதிகமுறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக சென்னை அணி திகழ்கிறது. சென்னை அணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியதால் சென்னை அணி வலுவாக இருக்கிறது.

இருப்பினும் நியூஸிலாந்து வீரரான ஜேமிசன்-ஐ 1 கோடி விலைக்கு கைப்பற்றிய சென்னை அணிக்கு இப்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆமாம், ஜேமிசன்-க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் குறைந்தது 6 மாதம் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதனால் சென்னை அணி ஜேமிசன்-ஐ வெளியேற்றிய நிலையில் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இலங்கை அணியின் கேப்டனாக ஷனாக -வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இருப்பினும் ஜேமிசன் இடத்திற்கு ஆஸ்திரேலியன் வீரர் மெரிடித் , ஆண்ட்ரே டை போன்ற வீரர்களை சென்னை அணி குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கேள்வி :

நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணியில் ஜேமிசன்-க்கு பதிலாக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் …..? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here