என்ன நடந்தாலும் இவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்ற முடியாது ; ஆதரவு கொடுப்போம் ; ராகுல் டிராவிட் பேட்டி ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 1ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய கிரிக்கெட் முன்னேறிவிடும்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். என்னதான் இந்திய கிரிக்கெட் அணி வென்றாலும் பேட்டிங் வலுவாக இருக்கிறதா என்று கேட்டால்..! அதற்கு இல்லை என்பது தான் உண்மையான பதில்.

ஏனென்றால், அனைத்து விதமான போட்டிகளிலும் தொடக்க ஆட்டம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரியான டெஸ்ட் போட்டியில் மட்டுமின்றி கடந்த சில போட்டிகளில் கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருந்ததில்லை.

இருப்பினும் வாய்ப்பு என்பது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் முதல் டெஸ்ட் போட்டியில் 8 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பின்பு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பிய காரணத்தால் சூர்யகுமார் யாதவிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

அதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில்-க்கு வாய்ப்பு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. கே.எல்.ராகுலின் பங்களிப்பு மோசமாக இருக்கும்பட்சத்தில் ஏன் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்…?

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில் : “கே.எல்.ராகுலுக்கு மட்டுமின்றி இது அனைத்து வீரர்களும் எதிர்கொள்ள வேண்டிய விஷயம் தான். அதுமட்டுமின்றி, ஒரு அணியாக நாங்கள் கே.எல்.ராகுலின் விளையாட்டை நம்புகிறோம். அதேபோல அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டே தான் வருவோம் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”

ராகுல் டிராவிட்-ன் பேட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம், சதம் அடித்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அணியில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பா ?

இதுவரை இரு டெஸ்ட் போட்டிகளில் நடந்து முடிந்த நிலையில் கே.எல்.ராகுல் மூன்று இன்னிங்ஸ்-ல் விளையாடிய நிலையில் வெறும் 20,17, 1 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here