டெஸ்ட் போட்டியில் இல்லாவிட்டாலும் ; ஒருநாள் போட்டியில் இவரை அசைக்கமுடியாது ; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

அதனை அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 1ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியின் தொடக்க வீரருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து :

இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் கே.எல்.ராகுல் சமீப காலமாகவே பெரியளவில் ரன்களை அடிப்பதில்லை. தொடர்ந்து குறைவான ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்து கொண்டு வருவதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

அதனால் இனிவரும் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி இருக்கும் நிலையில் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ராகுலுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

அதேபோல இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ” அடுத்த போட்டியில் கே.எல்.ராகுல் -ஐ வெளியற்றும் நிகழ்வு நடந்தால் ஆச்சரிப்பட எதுவும் இல்லை. இந்த முடிவை நிச்சியமாக ஒரு போட்டியை வைத்து இருக்காது, இறுதியாக விளையாடிய 6 போட்டிகளை வைத்து தான் இந்த முடிவை கையில் எடுப்பார்கள்.”

“உண்மையிலும் கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர் தான். அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாட கூடிய வீரர் தான். இருப்பினும் சின்ன ஒரு இடைவேளை தேவைப்படுகிறது. இருந்தாலும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் நிச்சியமாக சிறந்த கம்பேக் கொடுப்பார்.”

“நிச்சியமாக கே.எல்.ராகுலுக்கு இது கடினமான காலம் தான். அதிலும் விக்கெட்டை இழந்த பிறகு இதுதான் இறுதியான ஆட்டம் என்று தெரிந்தால் அது மிகவும் கடுமையான விஷயம் தான். இது போன்ற ஒரு தருணம் எனக்கும் தான் நடந்துள்ளது. ஆமாம், ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று, அமைதியாக பாத்துருமிற்கு சென்று கண்ணீர்விடுவேன். நிச்சியமாக அது நல்ல தருணமாக இருக்காது என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

“இருப்பினும் நான் இப்பொழுது சுப்மன் கில்-ஐ தேர்வு செய்வேன். ஆமாம், இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அருமையாக விளையாடி உள்ளார். அதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்-க்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் இந்த இடைவேளை-க்கு பிறகு நிச்சியமாக ஒருநாள் போட்டிகளில் கம்பேக் சிறப்பாக கொடுப்பார். ஆனால் ஒன்று கே.எல்.ராகுலை போன்ற திறமையான வீரர்கள் அதிக அளவில் இல்லை என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”