CSK அணியில் ஏற்பட போகும்… மாற்றம் … அடுத்த போட்டியில் வெற்றியை பெருமா ?? குழப்பத்தில் ரசிகர்கள்…!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது…! இதுவரை 21 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் பல விறுவிறுப்பான போட்டிகளிலும் நடந்துள்ளது. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி -20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆண்டுதோறும் ரசிகர்களின் ஆதரவை பெற்று நடைபெற்று வருகிறது.
புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றியை கைப்பற்றிய அணிகளுள் ஒன்று சிஎஸ்கே அணி. ஆனால் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமான சீசன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பல மோசமான போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த ஆண்டு காம்பேக் கொடுத்துள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது.
கடந்த போட்டியில் மொயின் அலிக்கு அடிபட்ட காரணத்தால் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. அதனால் அவருக்கு பதிலாக பிராவோ அணியில் இடம்பெற்றார். அதேபோல இரு தினங்களுக்கு முன் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஆர்.சி.பி அணியை எதிர்கொண்டது அதில் பேட்டிங் செய்யும்போது அம்பதி ராயுடுவுக்கு அடிப்பட்டுவிட்டது.
அதனால் அம்பதி ராயுடு பீல்டிங் செய்யவில்லை. அதுமட்டுமின்றி இதுவரை 4 போட்டியில் வெற்றிபெற்ற சிஎஸ்கே அணிக்கு அடுத்த போட்டி ஒன்றும் முக்கியம் இல்லை. அதனால் நிச்சியமாக அம்பதி ராயுடுவுக்கு ஓய்வு கொடுக்க அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
மொயின் அலி மற்றும் அம்பதி ராயுடுவுக்கு அடுத்த போட்டி ஒன்றும் அவளோ முக்கியம் இல்லை. அதனால் நிச்சியமாக சிறிது மாற்றம் சிஎஸ்கே அணியில் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.