தோனி இல்லை ; இவர்களது ஆட்டத்தை நான் மிகவும் ரசிப்பேன்..! கிறிஸ் மொரிஸ்..! யார் அது ?

இந்த இருவரின் பேட்ஸ்மேன் ஆட்டத்தை நான் எப்பொழுதும் கவனிப்பேன்… ; ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் – ரவுண்டர் கிறிஸ் மொரிஸ் பேட்டி…!

ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். இதுவரை 21 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் பல விறுவிறுப்பான போட்டிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியளில் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கேப்டன் ஆக ஸ்டீவ் ஸ்மித், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறியதால் புதிதாக சஞ்சு சாம்சன் கேப்டன் ஆக நியமனம் செய்தனர்.

முதல் போட்டியிலே சதம் அடித்துள்ளனர் சாம்சன். ஆனால் அதன்பின்னர் சில போட்டிகளில் சொதப்பல் ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார் சாம்சன். சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆல் – ரவுண்டர் கிறிஸ் மொரிஸ் அளித்த பேட்டியில் ; நான் இவர்கள் இருவரின் ஆட்டத்தை எப்பொழுதும் கவனிப்பேன்… !!

திடிரென்று கேப்டன் ஆன சஞ்சு சாம்சன் ஆட்டத்தை நான் எப்பையுமே கவனிப்பேன்…! அதேபோல முன்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் – ரவுண்டரானா ஹார்டிக் பாண்டியவின் பார்க்கும்போது மிகவும் ஆர்வமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை , என்று கூறியுள்ளார் கிறிஸ் மொரிஸ்.

இதுவரை நடந்த போட்டியில் கிறிஸ் மொரிஸ் 5 போட்டிகளில் பேட்டிங் செய்து 48 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக 36 ரன்களை விளாசியுள்ளார். இதுவரை 5 போட்டியில் பவுலிங் செய்த போது 9 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.