வீடியோ ; “வாவ்”…இந்த மாதிரி கேட்ச் பார்த்திருக்கவே முடியாது..! பந்தை பறந்து பிடித்த வீரர்…!
14வது ஐபிஎல் சீசன் டி-20 போட்டியில் நேற்று நடந்த 21வது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையாததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 123 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 19 ரன்கள், மயங்க அகர்வால் 31 ரன்கள், கிறிஸ் கெயில் 0 ரன்கள், தீபக் ஹூடா 1 ரன்கள், பூரான் 19 ரன்கள், கிறிஸ் ஜோர்டான் 30 ரன்களை அடித்துள்ளனர்.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16.4 ஓவரில் 5 விக்கெட் இழந்த நிலையில் 126 ரன்களை அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அதில் சுமன் கில் 9 ரன்கள், நிதிஷ் ரானா 0 ரன்கள், ராகுல் த்ரிபதி 41 ரன்கள், சுனில் நரேன் 0 ரன்கள், ஈயின் மோர்கன் 47 ரன்கள், ஆன்ட்ரே ரசல் 10 ரன்கள், தினேஷ் கார்த்திக் 12 ரன்களை எடுத்துள்ளனர். வெற்றியை கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இதனிடையே , இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரவி பிஷ்னாய் பிடித்த கேட்ச் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங் செய்த மூன்றாவது ஓவரை அர்ஷிதீப் பவுலிங் வீசினார்.
அதனை எதிர்கொண்ட சுனில் நரேன் சிக்ஸர் அடிக்க முயன்ற போது, அதனை தவிப்பிடித்துள்ளார் ரவி பிஷ்னாய், அதன் வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.