CSK அணியில் இவங்க இருவர் மட்டும் இல்லையென்றால் நிச்சியமாக போட்டி மாறிருக்கும் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மட்டுமின்றி, இனிவரும் போட்டிகள் அனைத்தும் இரு (சென்னை, மும்பை)அணிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் 10 ஓவர் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்பது தான் உண்மை. அதிலும் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரின் தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை.

இருப்பினும் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 155 ரன்களை அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதில் ரோஹித் சர்மா 0, இஷான் கிஷான் 0, ப்ரேவிஸ் 4, சூர்யகுமார் யாதவ் 32, திலக் வர்மா 51, சம்ஸ் 5 மற்றும் உனட்கட் 19 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அதனால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் ராபின் மற்றும் ராயுடு ஆகிய இருவரும் அணியை சிறப்பாக வழிநடத்தி ரன்களை அடித்தனர்.

ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பிறகு சென்னை அணிக்கு சரியான பார்டெர்ன்ஷிப் அமையவில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இறுதி நேரத்தில் களமிறங்கி சரியான பந்து வீச்சை எதிர்கொண்டு சிக்ஸர் அடித்து தொம்சம் செய்தார்.

அதனால் சென்னை அணி இறுதி பந்து வரை போராடி மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; ” இறுதிவரை இந்த போட்டியில் நாங்கள் எதிர் அணியிடம் போராடினோம்.”

“என்னதான் நாங்கள் பேட்டிங் சரியாக விளையாடவில்லை என்றாலும் பவுலிங் எங்களை போட்டியில் இருக்க வைத்தது. ஆனால் இறுதி நேரத்தில் சென்னை அணியின் பினிஷர் தோனி அவர்களது அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுவிட்டார். தோல்விக்கு காரணம் இதுதான் என்று சொல்லிவிட முடியாது”.

“ஆனால் ஒன்று போட்டியின் தொடக்கம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. ஆனால் ஒன்று சென்னை அணியை இறுதி நேரம் வரை அவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தோம். அப்படி இருந்தும் பிரிட்டோரியஸ் மற்றும் தோனி இருவரும் சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.”

“நாங்கள் தொடக்கத்தில் சில விக்கெட்டை தொடர்ந்து இழந்தது தான் காரணமாக மாறியது. நிச்சியமாக செய்த தவறை திருத்தி கொண்டு மீண்டும் சிறப்பாக கம்பேக் கொடுப்போம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”