சென்னை அணியில் இவர் இன்னும் இருக்கிறார் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் ; ரவீந்திர ஜடேஜா பேட்டி

0

நேற்று நடந்த 33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது…! இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும்.

ஏனென்றால் புள்ளிபட்டியலில் சென்னை அணி 9வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 10 வது இடத்திலும். அதனால் இனிவரும் போட்டிகள் இரு அணிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதனால் வேறு வழியில்லாமல் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் இரு ஓவர் வரை போராடிய மும்பை அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 155 ரன்களை அடித்தனர்.

பின்பு 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி காத்திருந்தது த்ரில் வெற்றி. ஆமாம், இறுதி ஓவரில் இறுதி பந்து வரை போராடிய சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. சென்னை அணி 7 போட்டிகளில் இரு போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டனான ரவீந்திர ஜடேஜா கூறுகையில் ; ப..! போட்டி இறுதி வரை பதற்றமான சூழ்நிலையில் கொண்டு சென்றனர். முக்கியமான தருணத்தில் எங்களது விக்கெட்டை தொடர்ந்து இழந்து கொண்டே வந்தோம்.”

“ஆனால் அப்பொழுது தலைசிறந்த பினிஷர் அணியில் விளையாடி வருகிறார். அவர் (மகேந்திர சிங் தோனி இன்னும் அணியில் தான் உள்ளார் என்பதை மறந்துவிட கூடாது. அவர் இருப்பதால் இன்னும் வாய்ப்பு உள்ளது என்பதை நாங்கள் நினைத்தோம். தோனி இன்னும் அவரது வேலையை சரியாக தான் செய்து வருகிறார்.”

“அதுமட்டுமின்றி, பவர்-ப்ளே வில் சிறப்பாக பவுலிங் செய்து முக்கியமான விக்கெட்டை கைப்பற்றினார் முகேஷ் சவுத்திரி. இப்போ நீங்க இன்னும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றால், அமைதியாக தான் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பேட்டிங், பவுலிங் -ஐ தாண்டி இன்னும் சரியாக பீல்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here