வெற்றியோ..! தோல்வியோ..! இந்த விஷயத்தில் மட்டும் சமரசமே கிடையாது ; ரோஹித் சர்மா உறுதி ; :

0

ஐபிஎல் 2022 : 33வது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம்போல சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. முதல் ஓவரில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அதனால் மும்பை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இருப்பினும், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் மற்றும் திலக் வர்மா விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 155 ரன்களை அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதில் ரோஹித் சர்மா 0, இஷான் கிஷான் 0, சூர்யகுமார் யாதவ் 32, ப்ரேவிஸ் 4, திலக் வர்மா 51, பொல்லார்ட் 14 ரன்களை அடித்துள்ளனர்.

இப்பொழுது சென்னை அணி 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 46 ரன்களை அடித்துள்ளது சென்னை அணி. இதில் ருதுராஜ் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.

மிச்சேல் சண்ட்னர் 11 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். போட்டிக்கு முன்பு ரோஹித் சர்மா பேசியதில் ; ” டாஸ் வென்று பவுலிங் செய்வதால் வெற்றி கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் இதே மைதானத்தில் 4 முறை முதல் பேட்டிங் செய்து வென்றுள்ளனர். அதனால் நாங்கள் பாசிட்டிவ் ஆக தான் விளையாட போகிறோம்.”

“இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று மாற்றங்களுடன் விளையாட போகிறோம். இந்த நேரத்தில் மூன்று மாற்றங்கள் என்பது சற்று சிந்திக்க வேண்டியதாக தான் உள்ளது. இருப்பினும், மாற்றங்கள் ஏற்படுவது முன்பு விளையாடியதை விட இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்கு தான்.”

‘என்னதான் மாற்றம் அணியில் நடந்தாலும் நிச்சியமாக பேட்டிங் அல்லது பவுலிங்கில் எந்த சமாதானமும் இல்லாமல் தான் விளையாடுவோம். அதுமட்டுமின்றி, எப்பொழுது ஐந்து பவுலர்கள் நிச்சியமாக தேவை படுகின்றனர். சென்னை அணியில் மூன்று, நான்கு இடது காய் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் அதனை சமாளிக்க எங்களுக்கு ஒரு ஆஃப்- ஸ்பின்னர் உள்ளார்.”

இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக வெற்றி பெற வேண்டும். ஆனால் போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை இறுதியில் தான் சொல்ல முடியும். இன்றைய போட்டியில் எப்படி விளையாடுகிறோமோ, அதில் இருந்து அடுத்த போட்டியில் முன்னேறி தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் சொல்லுங்கள், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் ப்ளே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா ?? இல்லையா ? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here