சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள புதிய வீரர்களுக்கு தோனி கொடுத்த சர்ப்ரைஸ்!

0

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

அதே மைதானத்தில், அன்றைய தினம் இரவு நடைபெறும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால், முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், கேப்டன்கள் ஆகியோர் மாற்று வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 29) நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைவருமான ஸ்ரீனிவாசன், சென்னையின் கேப்டன் தோனி, சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீவன் பிளெமிங்.

அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அணியின் ஜெர்சி வழங்கப்பட்டது.

அதன்படி, அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ், மண்டால், ரகானே, நிஷாந்த், ரஷீத் ஆகியோர் அவர்களுக்கான ஜெர்சியைப் பெற்றுக் கொண்டனர். தோனியின் கைகளால் ஜெர்சியைப் பெற்றுக் கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்கள், மகிழ்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 7 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என்ற எதிர்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளால் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, தர்மசாலா, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் களைக்கட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here