சிஎஸ்கே அணி நிச்சியமாக இப்படி தான், வீரர்களை தேர்வு செய்ய போகிறார்கள்…! ஏலத்தில் நடைபெற உள்ள சம்பவம் இதுதான்..! முன்னாள் வீரர் உறுதி ;

0

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதனை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர்.

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. ஆமாம் ..! ஐபிஎல் ஆரம்பித்த ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் தோனி.

இந்த முறை மெகா ஏலம் நடைபெற உள்ளதால், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களை தான் தக்கவைத்துள்ளது சிஎஸ்கே அணி. இதற்கிடையில் யாரை ஏலத்தில் கைப்பற்றும் என்று பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் ” சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றால் அனுபவம் மற்றும் வயதான வீரர்கள் அணி என்று பலர் கிண்டல் செய்துள்ளனர். அதேபோல இந்த முறையும் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களை தான் சிஎஸ்கே அணி தேர்வு செய்யும்.

ஏனென்றால் தோனி எப்பொழுதும் அந்த மாதிரி வீரர்களை தான் கைப்பற்ற நினைப்பார். எப்பொழுதும் புதிய வீரர்களுக்கு பதிலாக அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி கைப்பற்ற நினைக்கும். அதில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற்றால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

ஆனால் நிச்சியமாக சென்னை அணிக்கு வார்னர் சரிப்பட்டு வரமாட்டார். அதனால் டுப்ளஸிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாகிப்-ஆல் -ஹாசன் போன்ற வீரர்களை கைப்பற்ற நினைக்கும். மெகா ஏலத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி தேர்வு செய்ய முன்வந்தால் நிச்சியமாக போட்டி இருக்காது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா.

இதுவரை 14 சீசன் ஐபிஎல் டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 11 முறை சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் சுசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் நான்கு முறை சாம்பியன் படத்தை பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியில் யார் யார் இடம்பெற வேண்டும் ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here