வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்… ரசிகர்கள் அதிர்ச்சி ..!! யார் அந்த வீரர் … !

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. வெற்றிகமாக 13 ஆம் ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தாமதமாகவும் ரசிகர்கள் இல்லாமலும் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு அடிபட்டதால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். ஐபிஎல் 2020யில் இதுவரை அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அவருக்கு விலா எலும்புக் காயம் காரணமாகத்தான் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார் என்று டெல்லி கேபிடல்ஸ் அணி கூறியுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றி பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிபடியலில் 2வது இடத்தில் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு டெல்லி அணியின் சுழல் பந்து வீச்சாளர்அமித் மிஸ்ரா காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இஷாந்த் ஷர்மாவுக்குபதிலாக யார் அணியில் விளையாடுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது ?

அதற்கு பதிலளித்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் இஷாந்த் ஷர்மாவுக்குபதிலாக பிரதீப் சங்குவான் இருப்பார் என்று எதிர்பார்கிறோம் என்று கூறியுள்ளார்.