சிஎஸ்கே அணியில் இவரை எடுக்க திட்டம் ; ஆனால் அதில் சிக்கல் உள்ளது ; என்ன செய்ய போகிறது சென்னை ?

0

ஐபிஎல் 15வது சீசன் வருகின்ற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியது. அதில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

மெகா ஏலம் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். மெகா ஏலம் என்பதால் புதிய அணிகளை தவிர்த்து மிதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியது.

பின்னர் மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்க போவதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. பின்னர் புதிய இரு அணிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ, ஏலத்தில் பங்கேற்க போகும் வீரர்களில் ஏதாவது மூன்று வீரர்கள் அதில் ஒரு வெளிநாட்டு வீரர், இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் தக்கவைக்க பட வேண்டும் என்று கூறியுள்ளது பிசிசிஐ.

தக்கவைக்கப்பட்ட பட்டியலும் வெளியானது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் முக்கியமான அணிகளுள் ஒன்று தான் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்எடு மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.

இந்நிலையில் ஏலம் கூடிய விரைவில் நடைபெற உள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஆமாம்..! அதிலும் இந்த முறை ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் இந்த முறை ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 யில் சொல்லும் அளவிற்கு விளையாடவில்லை என்றாலும் ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் இந்த கேப்டனாக இல்லையென்றாலும் நிச்சியமாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார் என்பதில் சந்தேகமில்லை.

சிஎஸ்கே அணியில் இடம்பெற வேண்டும் என்று அவரவர் கருத்துக்களை சமுகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆமாம்..! அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 யில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு ஒரே காரணம் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் தான். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபலஸிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து வந்தனர். ஆனால் டுபலஸிஸ் அணியில் தக்கவைக்கப்படவில்லை.

அதனால் மாற்று வீரராக வார்னர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றால் சிறப்பான தொடக்க ஆட்டம் அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. ரவீந்திர ஜடேஜா 16 கோடி, மஹேந்திர சிங் தோனி 12 கோடி, மொயின் அலி 8 கோடி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 6 கோடி கொடுத்து தகவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்னும் சிஎஸ்கே அணியிடம் 48 கோடி மட்டுமே மிதமுள்ள நிலையில் சரியான விலைக்கு வாங்கினால் மட்டும் தான் மீதமுள்ள தொகை வைத்து சரியான வீரர்களை கைப்பற்ற முடியும்.

வார்னருக்கு அதிக விலை கொடுத்து அணியில் எடுத்தால் பின்னர் குறைவான தொகை வைத்து திறமையான வீரர்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும். அப்படி நடந்தால் சிறப்பான அணி அமைய வாய்ப்பே இல்லை. அதனால் இதனை எல்லாம் யோசனை செய்து தான் ஏலத்தில் ஒரு வீரர்களை கைப்பற்றுவார்கள்.

மற்ற அணிகளை காட்டிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 72 கோடி மிதமுள்ளது. அதனால் வார்னரை கைப்பற்ற நிச்சியமாக அனைத்து முயற்சிகளையும் கையில் எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை….!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here