ஏன் தமிழக வீரரான நடராஜனுக்கு வாய்ப்பே கிடைப்பது இல்லை ; காரணம் இதுதானா ?

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெற்றது.

அதில் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியில் களமிறங்கிய நடராஜன் அந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதுவும் யாக்கர் பந்துகளை வீசி மாஸ் காட்டினார் நடராஜன். அதனால் யாக்கர் மன்னன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அவ்வப்போது வாய்ப்புகளை பெற்று கொண்டு வந்த நடராஜனுக்கு இப்பொழுதெல்லாம் வாய்ப்பே கிடைப்பது இல்லை. ஆமாம்…! ஐபிஎல் 2021 போட்டிகளில் முதலில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடி 2 விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது, அப்பொழுது நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக உமர் மலிக் அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி உமர் மலிக்கை தக்கவைத்துள்ளனர்.

ஐசிசி உலகக்கோப்பை போட்டியிலும் நடராஜன் பற்றிய பேச்சே எடுக்கவில்லை பிசிசிஐ. அதன்பிறகு நடைபெற்ற சையத் முஸ்தக் அலி கோப்பை போட்டியில் தமிழக வீரரான நடராஜன் இடம்பெற வில்லை. பின்னர் பிட்னெஸ் சரியாக இல்லாத காரணத்தால் விஜய் ஹசாரே கோப்பையிலும் விளையாடவில்லை…!

ஏன்… !! நடராஜன் இந்திய அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர். அதற்கு முதல் காரணம்… நடராஜனுக்கு அவ்வப்போது பிட்னெஸ் சரியாக இல்லாத காரணம். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதனால் எந்த நம்பிக்கையில் அவரை அணியில் எடுக்க முடியும். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டிகளுக்கு பிறகு மிகப்பெரிய நட்சத்திர வீரராக திகழ்ந்தார்.

ஆனால் இப்பொழுது ஒரு போட்டியிலும் விளையாட முடியமால் இருக்கிறார் நடராஜன். அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க போகிறார். அதில் அவரது குறைந்த பட்ச விலை 1 கோடி என்று நிர்ணயம் செய்துள்ளார் நடராஜன். ஐபிஎல் 2022 யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சியமாக பல வாய்ப்பு அமையும்.

ஒருவேளை ஐபிஎல் 2022யில் சரியாக விளையாடவில்லை என்றால் பின்னர் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பே இருக்காது. ஆமாம்…. இந்திய அணியில் ஹர்ஷல் பட்டேல், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் போன்ற பல வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் பல வீரர்கள் அவ்வப்போது இடம்பெற்று அவரவர் திறமையை வெளிப்படுத்தி கொண்டு வரும் நிலையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பின்னர் வாய்ப்பு கிடைப்பதே கடினமாகும்….!!