ஐபிஎல் 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆமாம்…! இந்த முறை லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் 10 அணிகளை கொண்டு தொடங்க உள்ளது ஐபிஎல் 15வது சீசன்…!
புதிய இரு அணிகள் இணைந்துள்ளதால், மெகா ஏலத்தை நடத்த முடிவு செய்த பிசிசிஐ, வருகின்ற பிப்ரவரி மாதம் 12, 13 ஆகிய இரு நாட்களில் நடந்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது…!
அதன்படி சமீபத்தில் தான் தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரரான ப்ரெண்டன் மெக்குலம் அளித்த பேட்டியில் இவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்…! யார் அந்த வீரர் ?
ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதன் அடிப்படையில், ப்ரெண்டன் மெக்குலம் கூறுகையில் ; அணியில் நான்கு வீரர்கள் தான் தக்கவைக்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்ப பிளான் செய்து வீரர்களை வைத்திருக்க வேண்டும்.
அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுமன் கில் இல்லாதது அதிர்ச்சியாக இருக்கிறது. வேறு வழியில்லை, இனிவரும் ஏலத்தில் என்ன நடக்க போகிறது என்பதை பற்றி தான் யோசனை செய்ய வேண்டும். நரேன் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக அவர்களது ஆட்டத்தை விளையாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கடந்த இரு ஆண்டுகளாக வருண் சக்ரவத்தி என்ன செய்துள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஐபிஎல் 2021 போட்டியின் இரண்டாம் பாகத்தில் வெங்கடேஷ் ஐயர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன்.
அதிலும் ரசல் மற்றும் நரேன் போன்ற வீரர்களுக்கு பேக்அப் ப்ளேயர் கிடைப்பது மிகவும் கடினம் தான். அதிலும் குறிப்பாக ரசலுக்கு பேக்அப் ப்ளேயர் ஆக பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் ஆகிய இருவர் தேவைபடும் என்ற சூழ்நிலை அமையும். அப்பொழுது அணியை பேலன்ஸ் செய்வது கடினம், ஆனால் அதற்கு ஏற்ப செய்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் ப்ரெண்டன் மெக்குலம்