கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோசத்தில் உள்ளனர். நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை அடித்தனர். பின்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கி இறுதிவரை போராடி 143 ரன்களை மட்டுமே அடிக்கமுடிந்தது.
அதனால் சிஎஸ்கே அணியின் அசத்தலான பந்து வீச்சால் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சென்னை. இதனை பற்றி பேசிய முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரர் மைக்கல் வாகன்; சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அசத்தலாக விளையடியுள்ளனர்.
கடந்த ஆண்டு போல் சிஎஸ்கே அணி இல்லை என்று நிரூபித்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இப்பொழுது சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியளில் டாப் ஆர்டரில் அதாவது இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலைமை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று.
ஒருவேளை நான் சிஎஸ்கே அணியை தவிர மற்ற அணிகளில் இருந்தால் நிச்சியமாக இதனை நான் ஆபத்தாக தான் நினைப்பேன் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன்.