2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை 13ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்களில் முடிந்து இப்பொழுது 14வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. ஐபிஎல் என்றால் இந்திய திருவிழா போன்று நடைபெறும். அதுமட்டுமின்றி உள்நாட்டு விளையாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ஐபிஎல் டி-20 லீக் போட்டி.
நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தல மகேந்திர சிங் தலைமையிலான சென்னை சவ்ர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
முதலில் அதிரடியாக பேட்டிங் செய்த செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் அடித்துள்ளனர். பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதி வரை போராடி 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது.
போட்டி முடிந்து பிறகு தல தோனி அளித்த பேட்டியில் சில உருக்கமான பதில் கூறியுள்ளார் ; தோனியிடம் நீங்கள் எப்படி இன்னும் பிட் ஆக உங்களது உடலை வைத்து இருக்கீங்க ?? அதற்கு பதிலளித்த தோனி நான் நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறேன். நான் 24 வயதிலும் நான் இவளோ அடிப்பேன் என்று உறுதியாக சொன்னது இல்லை. அதேபோல தான் 39வயதிலும்.
ஆனால் மக்கள் அல்லது ரசிகர்கள் யாரும் என்னை கைகாட்டி முதலில் உடலை சரியாக பாருங்க அதன்பிறகு விளையாடலாம் என்று யாரும் என்னை பார்த்து சொல்ல கூடாது. அதுதான் எனக்கு என்னுடைய பாசிடிவ் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி. அதுமட்டுமின்றி இந்த போட்டி தோனிக்கு மிகவும் முக்கியமான போட்டி. இதுவரை தோனி கேப்டனாக 200 போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.