காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார் நட்சத்திர பவுலர் ; இப்பொழுதுதான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க தொடங்கியது அதற்குள் இப்படியா ?

0

நாளை முதல் இலங்கை மற்றும் இந்திய அணிக்கு எதிரான மூன்று டி-20 தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் டி-20 போட்டி நாளை இரவு 7 மணியளவில் லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் அதற்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

அதில் சில புதிய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. இப்பொழுதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியில் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை வைத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவது அவ்வவவு சுலபம் இல்லை.

ஆமாம்..! ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் பல புதிய இளம் வீரர்கள் மட்டுமின்றி பல அனுபவம் வாய்ந்த வீரர்களும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் நிச்சியமாக நிரந்தமான இடத்தை இந்திய அணியில் பிடிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் இருந்த ஒருவர் தான், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் வந்தார். அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் தீபக் சஹாருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காது.

ஆமாம்..! ஆனால் கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 தொடர் போட்டிகளில் களமிறங்கியது இந்திய அணி. அதில் தீபக் சஹார் பவுலராக விக்கெட்டை கைப்பற்றியது மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தார்.

அதுமட்டுமின்றி இலங்கை அணியை எதிர்த்து ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியது முக்கியமான பங்கு தீபக் சஹாரையே சேரும். பின்னர் சமீபத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.

இருந்தாலும் அதில் தீபக் சஹார் இறுதி வரை சிறப்பாக விளையாடினார். அதன்பின்னர் இப்பொழுது அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற தொடங்கினார். இருப்பினும் அவருடைய தொடை தசை காயம் காரணமாக அவரால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது.

இப்பொழுது தான் இந்திய அணியில் தீபக் சஹாருக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இப்படியா ?? தீபக் சஹாருக்கு பதிலாக அணியில் யார் இடம்பெற போகிறார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இலங்கை அணியை எதிர்த்து விளையாடும் இந்திய கிரிக்கெட் டி-20 அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷோனி, குல்தீப் யாதவ் மற்றும் அவேஷ் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here