இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்க போகும் உத்தேச அணியின் விவரம் ;

0

இன்று இரவு 7 மணியளவில் டசன் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் முதல் டி-20 போட்டியில் மோத உள்ளனர். இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் தான் இலங்கை அணியை எதிர்த்து விளையாட போகும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் வெளியிட்டது. சமீபத்தில் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற இரு அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் இந்திய அணி டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்துள்ளது. அதனால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் சுலபமான வெற்றியை இந்திய அணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகம்.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்: ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் தான். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இவர்கள் இருவரும் தான் முதல் இரு போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளனர். அதனால் அதே போன்ற ஓப்பனிங் தான் இன்றும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மிடில் ஆர்டர்: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்றால் இப்பொழுது சூர்யகுமார் யாதவ் தான் நியாபகத்திற்கு வரும். ஏனென்றால் சமீப காலமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருக்க இவரும் ஒரு முக்கியமான காரணம். ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த பேட்ஸ்மேன் தான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் சிறப்பாக விளையாடிய ஐயர் இறுதி போட்டியில் 16 பந்தில் 25 ரன்களை அடித்துள்ளார்.

ஆல் -ரவுண்டர் : ஆல் ரவுண்டர் என்றால் ரவீந்திர ஜடேஜா தான் அனைவரின் மனதிலும் தோன்றும். ஆனால் அவருக்கு காயம் என்றதால் வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாட முடியாமல் போனது.ஆனால் இப்பொழுது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் ஜடேஜா.

இளம் வீரரான வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் நிரந்தரமான இடத்தை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். ஆமாம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவருடைய திறமையை வெளிப்படுத்தி கொண்டே வருகிறார் வெங்கடேஷ் ஐயர்.

பவுலர்கள்: ஹர்ஷல் பட்டேல் கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.புவனேஸ்வர் குமார் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கியமான காரணமே புவனேஸ்வர் குமார் தான்.

வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நிச்சியமாக ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார். சுழல் பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் மற்றும் இளம் வீரரான ரவி பிஷோனி போன்ற இருவரும் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெறுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here