தோனி நினைத்திருந்தால் அதை செய்திருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை ; காசு ஒன்னும் பெரிது அல்ல ; தீபக் சஹார் பேட்டி

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் ஏலத்தில் பல முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். ஆமாம்… மொத்தம் 14 சீசன்களில் 11 முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது சென்னை. அதுமட்டுமின்றி ஏலத்திற்கு முன்பு மகேந்திர சிங் தோனி, மொயின் அலி , ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நான்கு வீரர்கள் தக்கவைத்துள்ளனர்.

இருப்பினும் ஏலம் என்றதால் யார் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார் என்று பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆமாம்..! ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன் படத்தை பெற்றுள்ளது சிஎஸ்கே அணி.

சென்னை அணி முடிந்த வரை போன ஆண்டு இருந்த வீரர்களை முடிந்த வரை மீண்டும் அணியில் கைப்பற்றியுள்ளனர். அதில் தீபக் சஹார் தான் அதிகபட்ச விலையான 14 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது சென்னை. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை 12 கோடி ருப்பை கொடுத்துள்ளனர்.

அணியில் இடம்பெற்றத்தை பற்றி பேசிய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் அளித்த பேட்டியில் ; எனக்கு தெரிந்து ஒரு வீரரை காசு பணத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. இதே நான் 10 லட்சம் அல்லது 80 லட்சமாக இருந்தாலும் என்னுடைய ஒரே எண்ணம் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வதில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அதே தோனி 2018 ஆம் ஆண்டு என்மேல் வைத்த நம்பிக்கை என்னுடைய முக்கியமான பொறுப்பாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது சிறப்பாகவும் மற்றும் சந்தோஷமாகவும் உள்ளது என்று கூறியுள்ளார் தீபக் சஹார்.

எனக்கு முன்பே தெரியும் சென்னை அணி ஏலத்தில் என்னை கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுதெல்லாம் தோனி மற்றும் என்னுடைய விலை பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதற்கு நான் ஒன்று சொல்ல வேண்டும் ” தோனியை தான் சென்னை அணி முதல் வீரராக கைப்பற்ற முடிவு செய்தனர். ஆனால் தோனி பாய் தான் என்னை குறைவான விலையில் என்னை எடுங்கள் என்று தோனி கூறியுள்ளதாக தீபக் சஹார்.

சமீபத்தில் நடந்த போட்டியில் இந்திய அணியில் நான் என்ன செய்தனோ, அதேபோல தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் செய்ய நினைக்குறேன். போட்டியின் வெற்றியாளராக இல்லையென்றாலும் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய முழு முயற்சியையும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் தீபக் சஹார்.